This poem is not written by me, i'm sharing here coz i like this poem.
குளிர்கால காலையது
யாருமற்ற சாலையில்
கைகோர்த்துச் செல்கிறோம் நாம்!
காற்றின் சுகந்தம் அருமை, என்கிறாய்.
காற்றா!
சாலை முழுவதும் நம்
காதலல்லவா படர்ந்திருக்கிறது, என்கிறேன்.
நம் கண்கள் அழகாக மோதிக்
கொள்கின்றன!
வெட்கத்தோடு தலைகுனிகிறாய் நீ;
வெட்கம் கலந்து விட்ட நம்
காதல் இன்னும் அழகாக படர்கிறது
சாலை முழுவதும்!
Source:
appaavi.hikanyakumari.com/?p=121