கற்றது களவு (1 viewing) (1) Guest
 | | |
|
TOPIC: கற்றது களவு
|
|
கற்றது களவு 2 Months, 2 Weeks ago
|
Karma: 0
|
|
கண்ணுக்கு கண் மாதிரி களவுக்கு களவு. ஏமாற்றப்பட்ட ஒருவன் இந்த சமூகத்தை ஏமாற்றத் துணிவதுதான் கதை. இந்த ஒன் லைனுக்குள் சுவாரஸியம் எனும் ஏர் ஜெட் என்ஜினை வைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். முதலில் ஜோராக ஓடும் என்ஜின் பல இடங்களில் உதறுகிறது. ராமேஸ்வரத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் கிருஷ்ணா, விஜயலட்சுமி ஜோடியை டெல்லி போலீஸ் துரத்துகிறது. உயிரை கையில் பிடித்து ஓடும் அவர்களை காப்பாற்றுகிறார் சம்பத். அவர் யார் என்றால் உள்ளூர் போலீஸ். அட, நல்லாயிருக்கே என்று நிமிர்ந்து உட்காரும் போது கட் பண்ணி பிளாஷ்பேக்குக்கு போகிறார்கள். மாணவர் வங்கி என்று ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடிக்கிறார் கிருஷ்ணா. இதனை அவர் வங்கி அதிகாரி சந்தான பாரதியிடம் சொல்ல, அவரோ அது தனது திட்டம் போல் அறிவித்து பணத்தையும் புகழையும் சுருட்டுகிறார். நியாயம் கேட்கும் கிருஷ்ணாவுக்கு கிடைப்பது நித்திய அடி.
சிங்கம்
சிங்கம்
(சனிக்கிழமை 5 ஜூன் 2010)
ஹரியின் மற்றுமொரு கள்ளன் போலீஸ் விளையாட்டு. வெள்ளை உடை வில்லன், டாடா சுமோ துரத்தல், பன்ச் டயலாக் ஹீரோ என்று பார்த்து ரணமாகிய ஃபார்முலா என்றாலும் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சீட்டில் உட்கார வைப்பது சிங்கத்தின் ஸ்பெஷாலிட்டி. நல்லூர் கிராமத்து சப் இன்ஸ்பெக்டர் சூர்யா. மளிகை கடை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவரை காக்கி போட வைக்கிறது அப்பா ராதாரவியின் ஆசை. கொலை வழக்கில் சிக்கும் சென்னை தாதா பிரகாஷ்ராஜ் நல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிடுகிறது. பிரகாஷ்ராஜ் கையெழுத்துப் போட பினாமி ஒருவரை ஏற்பாடு செய்ய சூர்யா அதை மறுக்க தொடங்குகிறது ஆடு புலி ஆட்டம். சூர்யா இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னை வருகிறார். வந்த பிறகுதான் தெரிகிறது இந்த பதவி உயர்வும் மாற்றலும் பிரகாஷ்ராஜின் கைங்கர்யம் என்று. அப்புறமென்ன... வில்லன் சவால் விட, ஹீரோ சாகஸம் செய்ய ரணகளத்துடன் கிளைமாக்ஸ்.
thanks webdunia
|
|
|
|
|
|
|
Re: கற்றது களவு 2 Months, 2 Weeks ago
|
Karma: 0
|
dear friends...
get more info about this and new job vacan cies please click www.thengapattanam.net
|
|
|
|
|
|
|
 | | |
|
|